சிங்கப்பூரில் இனி நல்லாவே சம்பாதிக்கலாம்! – வீட்டு வாடகைதான் அதிகம்!புலம்பும் மலேசிய தொழிலாளர்கள்

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online
சிங்கப்பூர் வெள்ளி வலுவாக இருப்பதால் அதிக பணத்தை தங்கள் குடும்பத்திற்கு அனுப்ப முடிகிறது என்று சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால்,சிங்கப்பூரில் வாடகை அதிகமாக இருப்பதும் மலேசியாவில் விலைவாசி அதிகரித்து இருப்பதும் தங்களுக்கு கவலை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.மலேசிய ரிங்கிட்டிற்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு அதிகரித்திருப்பதால் மலேசியாவில் வசிக்கும் தன் பெற்றோருக்கு ஒவ்வொரு முறையும் அதிக பணத்தை அனுப்ப முடிவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவில் குடியுரிமை பெற்றவரான செவிலியர் ஒருவர் சிங்கப்பூரின் நிரந்தரவாசி ஆவார்.திருமணம் ஆகாத அவர் ஒவ்வொரு முறையும் $500 முதல் $700 வரை அவரது குடும்பத்திற்கு அனுப்பமுடிகிறது.

சிங்கப்பூரின் அங் மோ கியோவில் வசிக்கும் வீவக வீட்டுக்கு வாடகை விரைவில் அதிகரிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று மலேசிய ரிங்கிட்டுக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்தது.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாணயக் கொள்கைகளை இறுக்குவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்தது.இதனையடுத்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கூடி வருகிறது.

சிங்கப்பூர் நாணயம் வலுவடைந்து வருவதால் மேலும் பல மலேசியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.ஏறத்தாழ 9,00,000 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாக தகவல்கள் கூறுகின்றன.