இது உங்கள் உரிமை! – சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் எளிதாக வாக்களிப்பதற்கான நடவடிக்கை

GE2020: 101 overseas Singaporeans unable to vote due to 'glitch' in ICA system
vote
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களும் எளிதாக வாக்களிக்க வேண்டும் என்று Pakatan Harapan கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்தில் வாக்குச்சாவடி ஒன்றை அமைப்பதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க அது வழிவகை செய்யும் என்பதால் மலேசியாவின் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அடுத்த மாதம் 19ஆம் தேதி மலேசியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சிங்கப்பூரில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசிய வாக்காளர்கள் பணிபுரிகின்றனர் அல்லது வசிக்கின்றனர் என ஜோகூர் மாநிலத்தின் Pakatan Harapan தலைவர் சலாஹுடின் அயுப் (Salahuddin Ayub) கூறினார்.
எதிர்வரும் 15-ஆவது மலேசியத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் சிங்கப்பூர்-ஜோகூர் இடையேயான போக்குவரத்தை சரளமாக உறுதி செய்வதற்கு தேவையான மனிதவளத்தை தயார்செய்யும் படி மலேசியாவின் சுங்கச்சாவடி குடிவரவுத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.