43 வயதில் வால்ட்ஸ் நடனப்பயிற்சி எடுத்த சிங்கப்பூரர் – நடனத்தின் மீதிருந்த காதல்

singapore man dance in street party

சிங்கப்பூரர் ஒருவர், நடனத்தின் மீதான தனது ஆர்வத்தைப் பற்றியும், சிறுவயதிலிருந்தே அதை எப்படிச் செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை கீழ்வருகிறது.

43 வயதான லியோ, வங்கியில் ஆன்டி-லான்டரிங்கில் பணிபுரிகிறார், வால்ட்ஸ் மூலம் தனது குழந்தைப் பருவத்தில் நடனத்தின் மீதிருந்த ஏக்கத்தை மீண்டும் எப்படித் தொடர முடிந்தது என்பதைப் பற்றி கூறும் கட்டுரை இது.

தான் அக்டோபர் 2021 இல் வால்ட்ஸ் நடனத்தை கற்கத் தொடங்கியதாகவும்  சமூக வலைதளத்தின் பதிவு ஒன்றின் மூலம் வால்ட்ஸ் பற்றி தமக்கு தெரியவந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். நடன வகுப்பும் அதில் உள்ளவர்களையும் பிடித்திருந்ததால் வாரந்தோறும் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் தான் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தனக்கு நடனமாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஃபுட் லூஸ் (1984) மற்றும் டர்ட்டி டான்சிங் (1987) ஆகிய திரைபடங்களால் தான் மெய்சிலிர்க்கப்பட்டதாகவும் லியோ கூறினார்.

ஒருமுறை தான் ஆர்ச்சர்ட் சாலையில் அனைவருடனும் நடனமாடு வேண்டும் என்றும் தன்னை ஸ்விங் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும்படி தன் பெற்றோரை ஒருமுறை கட்டாயப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

 

அக்க்காலக்கட்டத்தில், ஸ்விங் சிங்கப்பூர் என்பது 1988 முதல் 1992 வரை தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆர்ச்சர்டில் நடத்தப்பட்ட ஒரு தெரு கூத்து போன்றதாகும்.

தன் பதின்பருவத்தில், ஜப்பானிய திரைப்படமான ஷால் வி டான்ஸ் பார்த்தபோது நடனத்தின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.

தனது தொழில் வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் தனக்கு அதிக நேரம் கிடைப்பதாகவும், தனக்கு இந்த வகுப்பில் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார். தனது டான்ஸ் ஸ்டுடியோ தியோங் பாருவில் உள்ள பென் லாவ் டான்ஸ் ஸ்டுடியோ ஆகும். தான் தனது சொந்த மகிழ்ச்சிக்காக அதை செய்வதாகவும் அவர் கூறினார்.