திரும்ப கிடைச்சுருச்சு! – மலேசியாவில் தொலைத்த பொருளை மீண்டும் பெற்றுக் கொண்ட சிங்கப்பூர் நபர்

singapore man lost his wallet on malaysia stranger youth regive wallet

இரவும் பகலும் பாடுபட்டு உழைத்து பொருளை ஈட்டுவதையும் விட கடினமான வேலை ஈட்டிய பொருளை பாதுகாப்பாக வைத்திருப்பது ஆகும். செலவுக்கு வைத்திருந்த தொகையை வெளிநாட்டில் இருக்கும்போது தொலைத்துவிட்டால் நேரத்தில் ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சிங்கப்பூரைச் சேர்ந்த Zou Cui Ping மலேசியாவில் செலவுக்காக வைத்திருந்த பணத்தை பணப் பையோடு தொலைத்துள்ளார்.இவருக்கு வயது 80 ஆகும். மலேசிய ரிங்கிட் RM 600 மற்றும் பொருளாளர் S$ 1000 ஆகியவற்றை பணப்பையில் வைத்திருந்த அவர் பணப்பையோடு மொத்தமாக இழக்கும் அளவிற்கு துரதிஷ்டவசமாக இருந்துள்ளார்.

மலேசியாவின் ஜோகூரிலுள்ள Kluang பகுதியில் வசிக்கும் உறவினர்களை காண்பதற்காக மே 27, 2022 சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.Kluang நகரத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிய Zou குழப்பத்தில் தவறான நிறுத்தத்தில் இறங்கினார். அந்த குழப்பம், அவரது பணப்பையை இழக்க வழி வகுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

பேருந்தில் சிங்கப்பூர் நபருக்கு பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் ,Zou அவரது பணப்பையை பேருந்து இருக்கையிலேயே தவற விட்டதை கண்டு பிடித்தார். பணத்தை உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க முயன்ற அந்த இளைஞன், பேருந்து நிறுவனத்தை உடனடியாக தொடர்பு கொண்டு சம்பவம் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

மீண்டும் தனது பணப்பையை திரும்பப் பெற்றுக்கொண்ட Zou அந்த இளைஞனின் நேர்மையை பாராட்டும் விதமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு ஒரு சிவப்பு நிற பாக்கெட்டை வழங்கினார். ஆரம்பத்தில் அந்த இளைஞன் வாங்க மறுத்தார்.ஆனால் தேனீர் உபசரிப்பதற்காக அந்த பாக்கெட்டை வைத்திருக்கும்படி Zou வற்புறுத்திய பின் அந்த பரிசை பெற்றுக்கொண்டார்