பலகை ஓட்டையில் விழுந்த சிங்கப்பூரர்! – மலேசியாவின் பினாங்கு அரசு நடவடிக்கை!

man-penang-plank : pc-mothership.sg
மலேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான செவ் ஜெட்டிக்கு விடுமுறையைச் செலவிடுவதற்காக சென்ற 40 வயதான சிங்கப்பூரர் பலகையில் விழுந்து காயங்களுக்கு ஆளானார்.இந்த சம்பவம் மலேசியாவில் உள்ள பினாங்கில் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.
விடுமுறை காரணமாக அவரது மனைவி உட்பட மற்ற எட்டு குடும்ப உறுப்பினர்களுடன் சென்றிருந்தார்.அங்கிருந்த பலகையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அழுகிய நிலையில் சிதைந்து போன பலகையில் அடியெடுத்து வைத்தார்.
பலகை உடைந்து அவரது இரண்டு கால்களும் விரிசல் வழியாக விழுந்தன.இரண்டு கைகளால் பிடித்துக்கொள்ள முயன்ற போது தவறுதலாக இடது கையில் சுளுக்கு ஏற்பட்டது. அதனால் அவரால் அங்கிருந்து நகர முடியவில்லை.

அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து நடந்த அடுத்த நாளே இந்த குடும்பம் மீண்டும் சிங்கப்பூர் செல்வதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறினார்.
இந்தச் சம்பவம் வயதானவர்களுக்கு நேர்ந்திருந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்றும் தனது கணவரின் இளமை அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.
இது போன்ற விபத்துக்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க பினாங்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக லீ ஜெட்டிக்கு ஏற்கனவே RM100,000 (S$29,725) ஒதுக்கப்பட்டுள்ளதாக பெங்கலன் கோட்டா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் கூறினார்.