தலைக்கு S$7 மில்லியன் பரிசு: துப்பு தேடும் போலீஸ் – சிங்கப்பூர் ஆடவருக்கு வலை

singapore Man wanted by US $7 million bounty
Photo: FBI

சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரின் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$7 மில்லியன்) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரிலுள்ள Swanseas Port Services shipping நிறுவனத்தின் உரிமையாளரான 62 வயதான க்வெக் கீ செங் என்பவர் வடகொரியா மீதான பொருளாதாரத் தடை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், க்வெக் அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அதிகாரிகளால் தேடப்படுகிறார்.

மேலும் அவரைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு வெகுமதியையும் அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அவர் இன்னும் சிங்கப்பூரில் இருப்பதாகவும், சிங்கப்பூரின் ஐக்கிய நாடுகள் சட்டம் 2001ன் கீழ் வர்த்தக விவகாரத் துறையின் விசாரணையில் அவர் இருப்பதாகவும் சனிக்கிழமையன்று, சிங்கப்பூர் போலீஸ் படை கூறியது.

கடந்த ஆண்டு 2021 ஏப்ரலில் விசாரணைகள் தொடங்கியதிலிருந்து அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.