சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் நீக்கம்: முகக்கவசம் எங்கு அணிய வேண்டும்? எந்த ஊழியர்களுக்கு கட்டாயம்

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூரில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் கட்டாயம் இல்லை.

இந்த புதிய நடைமுறை இன்று பிப்.13 முதல் நடப்புக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார நிலையங்கள் மற்றும் பொது பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிப்.13 முதல் நடப்புக்கு வந்துள்ள மாற்றங்கள் – கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

இருப்பினும், மருத்துவமனைக்குள் உள்ள வார்டுகளில், மேலும் மருந்தகம், நர்சிங் ஹோம் போன்ற இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

அதாவது அந்த இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பார்க்கச்செல்வோர் மற்றும் நோயாளிகளுக்கு முகக்கவசம் அணிவது பொருந்தும்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள், வயதானோர் கூட்டமாக இருக்கும் இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் வந்தவுடன் இனி கோவிட் நெகடிவ் சான்றிதழை காட்ட தேவையில்லை – மேலும் பல மாற்றங்கள் இன்று முதல்…