வெப்பம் தணிந்து இடியுடன் கூடிய மழை பெய்யும்… மகிழ்ச்சியான செய்தி!

Singapore Met forecasted rainy
(PHOTO: Zheng Zhangxin)

சிங்கப்பூரில் மே மாதம் முதல் பாதியில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, அந்த காலகட்டத்தின் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வெள்ளிக்கிழமை (ஏப். 29) தெரிவித்துள்ளது.

நாகேந்திரன் கே. தர்மலிங்கம் வழக்கு: கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மலேசியாவுக்கு பதில் கூறிய பிரதமர் திரு லீ!

சிங்கப்பூரின் சில பகுதிகளில், பிற்பகல் மற்றும் மாலை நேரத்துக்கு இடையில் சில நாட்களில் மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய குறுகிய கால மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும் விடியலுக்கு முந்தைய நேரம் மற்றும் காலை நேரங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஒட்டுமொத்தமாக குறிப்பிடுகையில், இந்த மே மாதத்திற்கான மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட வழக்கத்திற்கு ஒத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், சில நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.

மேலும் சில மழை நாட்களில், தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஆடவரை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பணிப்பெண்… நீதிமன்றத்தில் ஆஜர்!