வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மரணம்: இந்திய ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு – முழு தகவல்

Westlite Woodlands dormitory test positive for COVID-19
(Screengrab: Google Maps)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 37 வயது ஆடவரின் மரணத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 26 வயது ஆடவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டோம்.

புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) நள்ளிரவு 1:25 மணியளவில் உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் உள்ள தங்கும் விடுதியில் இரண்டு ஊழியர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது, அது மரணத்தில் முடிந்தது.

சென்னையில் பேயாட்டம் ஆடிய கனமழை: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாதிப்பு

அவர்கள் யார்?

இந்திய நாட்டை சேர்ந்த 26 வயதான பன்னீர் வெற்றிவேல் என்ற ஊழியர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) குற்றவியல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 1.25 மணிக்குள், 20 உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க் E1 அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் பன்னீர் வெற்றிவேல், 37 வயதான திரு ராஜேந்திரன் சண்முகசுந்தரன் என்பவரை பலகையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் இருவரும் தகராறில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பன்னீர் கைது செய்யப்பட்டு, கூடுதல் விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சண்டை: மரப்பலகையால் தாக்கியதில் ஒருவர் மரணம் – சந்தேக நபர் கைது