சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை, அபராதம்

(Photo Credits Today)

சிங்கப்பூரில் கடந்த 2015ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்ட, ஒரு சட்டவிரோத தங்கும் விடுதியை நடத்திவந்த கட்டுமான ஊழியருக்கு இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், ஊழியருக்கு S$24,000 அபராதமும் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 6) விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?

ரைஹான் ஜாஹிர் (43) என்ற அந்த ஊழியர, கடந்த செவ்வாயன்று (ஜனவரி 4) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதில் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் வேலை செய்தது உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும்.

மேலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மோசமான செயலைச் செய்தது உட்பட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஊழியரான ரைஹான், அபராதத்தை செலுத்த முடியவில்லை என்றால் கூடுதலாக ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஏப்ரல் 3, 2015 அன்று கெய்லாங் கடைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை