‘சிங்கப்பூரில் 12 வருடங்களாக பணிபுரிகிறேன்.ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை’ – பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் கைதான வெளிநாட்டு ஊழியர்

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஜகதீஸ் கார்த்திக் என்பவர் காலாங் பாருவில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.சில சமயங்களில் இவர் மோசமான மானபங்கக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த அவர்,கடந்த திங்கள்கிழமை 25 வயதான இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.அடையாளம் தெரியாத நபரால் மானபங்கப்படுத்தப்ப்பட்டதாக அந்தப் பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

புகாரளிக்கப்பட்ட ஏழுமணி நேரத்திற்குள் காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடித்தது.சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியைப் பிடித்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று நீதிமன்றத்தில் பேசிய ஜெகதீஸ்வரன் ‘அந்தப் பெண்ணைத் தொடவே இல்லை ‘ என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார்.

கடந்த 12 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் இதுவரை இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதில்லை எனவும் ஊழியர் கூறினார்.$15,000 பிணையில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.அடுத்த மாதம் டிசம்பர் 22-ஆம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.