சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி – எதற்காகத் தெரியுமா?

NEA takes action against highrise litter
(Photo: GOV.SG)

சிங்கப்பூரில் காலநிலை மாற்றத்தால் நீண்ட காலமாக ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் புதிய ஆய்வுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக 23.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.உயர்ந்து வரும் கடல் மட்டம்,உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அவற்றை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வழிநடத்த இது உதவும்.

சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையம் ,பருவநிலை மாற்ற அறிவியல் ஆய்வுத் திட்டத்தை மேற்கொள்ளும்.இந்த ஆய்வு ஐந்து முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும்.கடல்மட்ட உயர்வு,நீர்வளமும் வெள்ள நிர்வாகமும்,பல்லுயிர்க் கட்டமைப்பும் உணவுப் பாதுகாப்பும்,எரிசக்தியும் சுகாதாரமும்,அறிவியலுக்கும் கொள்கைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகியவை இந்த முன்னுரிமைகள் ஆகும்.

ஆய்வின் தொடக்க நிகழ்ச்சியில்,நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் Grace Fu உரையாற்றினார்.2100-ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீத விளைநிலங்களும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பும் காலநிலை ரீதியாக பாதிப்படையும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் கூறியிருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மீன்பிடிப்பு வேளாண்மை போன்ற பொருளாதார நடவடிக்கைகள் இந்த வட்டாரக் கடலோரப் பகுதிகளில் இடம்பெறுவதை சுட்டிகாட்டிய அமைச்சர்,பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் வட்டார நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.