சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Ministry Of Foreign Affairs Official Facebook Page

 

மியான்மர் நாட்டு சுற்றுப்பயணத்தைப் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் (International Committee of the Red Cross- ICRC) பீட்டர் மாரரை சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்தார்.

 

அப்போது அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒரு தனித்துவமான மற்றும் அத்தியாவசியமான, மனிதாபிமான பங்கை வகிக்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணி மற்றும் இந்த பணிக்கு தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பணிகளைச் செய்து வருவதாகப் பாராட்டு தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பின் போது மியான்மர் உள்ளிட்டப் பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்த தகவலை சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.