இந்திய அமைச்சருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Dharmendra Pradhan Official Twitter Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக விமானம் மூலம் இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மார்ச் 1- ஆம் தேதி மதியம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… பேஸ்ட் வடிவ பொருளுடன் பிடிபட்ட ஊழியர்

அதைத் தொடர்ந்து, டெல்லியில் இந்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, அவரது இல்லத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசை வழங்கியும் சிறப்பாக வரவேற்றார் இந்திய அமைச்சர்.

Photo: Minister Dharmendra Pradhan Official Twitter Page

இந்த சந்திப்பில், இந்தியா- சிங்கப்பூர் இடையேயான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஒத்துழைப்பு, டிஜிட்டல் கல்வி உள்ளிட்டவற்றைக் குறித்து இரு அமைச்சர்களும் விரிவான ஆலோசனையை நடத்தியதாக தகவல் கூறுகின்றனர்.

“15 வயது சிறுவனை பிப்.24 முதல் காணவில்லை”- தகவல் கொடுக்கும்படி சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

இந்த சந்திப்பு குறித்து இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே திறன் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு ஆகியவைத் தொடர்பாக விவாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.