சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் உடன் சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நேற்று (04/02/2022) காலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ- யை சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் அதிபர்!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மற்றும் சீனா இடையிலான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதில், இரு நாடுகளிடையேயான பயண போக்குவரத்து, பொருளாதாரம், இறக்குமதி, ஏற்றுமதி, பிராந்தியங்களில் நிலவும் சூழல் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.

விளையாட்டு பொருளில் கம்பியாக மாற்றி கொண்டு வரப்பட்ட தங்கம் – சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “விரிவான பொருளாதார, கலாச்சார மற்றும் மக்களிடையே உறவுகளின் காரணமாக சிங்கப்பூரும், சீனாவும் ஒரு தனித்துவமான சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக இணைப்பு (connectivity), டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy) மற்றும் நிலையான வளர்ச்சி (Sustainable Development) ஆகியவற்றில் எங்களது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் உள்ள ‘Bird’s Nest’ மைதானத்தில் நேற்று (04/02/2022) மாலை 05.30 PM மணிக்கு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், சிங்கப்பூர் அதிபருடன் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.

தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH

சிங்கப்பூர் அதிபருடன், அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பெய்ஜிங்கிற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.