ஜோகூருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Ministry of Foreign Affairs, Singapore

மார்ச் 13- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஒரு நாள் பயணமாக மலேசியா நாட்டின் ஜோகூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்பிணி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தர் (Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar), பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்பிணி சுல்தான் இப்ராஹிம் (Tunku Ismail Ibni Sultan Ibrahim), முதலமைச்சர் ஒன் ஹபீஸ் ஹாசி (Onn Hafiz Ghazi) ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

துவாஸ் சவுத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் ஜோகூர் தலைவர்கள் சிங்கப்பூருக்கும், ஜோகூருக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே எல்லை தாண்டிய வருகைகள் மற்றும் பரிமாற்றங்கள் முழுமையாக மீண்டும் தொடங்கப்படுவதை அவர்கள் வரவேற்றனர்.

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

தமிழ் மற்றும் இந்திய புத்தாண்டிற்கான நிகழ்ச்சி நிரல் குறித்த பட்டியலை வெளியிட்டது ‘லிஷா’!

ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்புத் திட்டத்தில் (Rapid Transit System- ‘RTS’)ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் மற்றும் இரு பகுதிகளுக்கும் இடையே படகுச் சேவைகள் தொடங்கப்படுவதைக் குறித்து தலைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் ஜோகூர் தலைவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராயவும், நமது மக்களின் பரஸ்பர நலனுக்காக தொடர்ந்து நெருக்கமாக ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.