நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்: ஜோகூர் சுல்தான் அளித்த விருந்தில் பங்கேற்ற சிங்கப்பூர் தலைவர்கள்!

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

ஏப்ரல் 22- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும், பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. பின்னர், ஒருவருக்கொருவர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஏப். 23- ல் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் குருபெயர்ச்சி விழா!

அந்த வகையில், சிங்கப்பூர்- மலேசியா நாடுகளுக்கு எல்லையில் அமைந்துள்ள ஜோகூர் மாகாணத்தின் மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் (His Majesty Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar) ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் விருந்தில் சிங்கப்பூர் தலைவர்கள் மற்றும் ஜோகூர் அரசக் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஜோகூர் சுல்தான் அளித்த மதிய விருந்தில் சிங்கப்பூரின் மனிதவளம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் (Minister for Manpower and Second Minister for Trade and Industry Dr Tan See Leng) மற்றும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (Minister for Sustainability and the Environment Grace Fu) மற்றும் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட் ஏவுதல் வெற்றி…. சிங்கப்பூரின் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள் அன்று ஜோகூர் சுல்தான் சிங்கப்பூர் தலைவர்களுக்கு விருந்து அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை.

கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சிங்கப்பூருக்கும்- ஜோகூருக்கும் இடையிலான எல்லைத் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.