மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிங்கப்பூர் அமைச்சர்கள்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று காலை 08.20 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்!

அதைத் தொடர்ந்து, காலை 09.00 மணிக்கு மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறவுள்ளது. பின்னர், காலை 09.30 மணி முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குவிந்தனர்.

Photo: Hindu Endowments Board Official Facebook Page

இந்த நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆகியோர் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

“12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதுப் பெருமைக்குரியது” என்று அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.