ஓரினப் புணர்ச்சிக்கு ஆதரவாக போராட்டம் – 3 பேர் கைது

(PHOTO: WALB)

கல்வி அமைச்சின் (MOE) கட்டிடத்திற்கு வெளியே ஓரினப் புணர்ச்சிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து நேற்று (ஜனவரி 26) மாலை மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று, 19 முதல் 32 வயதுக்குட்பட்ட 3 பேர் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 3 பேருக்கு புதியவகை B117 தொற்று – Work permit வைத்திருப்பவர் ஒருவர் பாதிப்பு

மாலை 5 மணியளவில், 5 பேர் கொண்ட குழு, போனா விஸ்டா டிரைவில் (Buona Vista Drive) உள்ள MOE தலைமையகத்திற்கு வெளியே இந்த போராட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பதாகை ஏந்தி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி இல்லை, தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு வந்தபோது, ​​3 நபர்கள் மட்டுமே குழுவில் இருந்தனர்.

பொது ஒழுங்கு சட்டத்தின்கீழ் அது குற்றம் என்பதால் அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு காவல்துறை எச்சரித்தது.

இருப்பினும், அவர்கள் காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்து, தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

காவல்துறையினர் பலமுறை எச்சரித்த போதிலும் மூவரும் இணங்க மறுத்ததால், அவர்கள் மாலை 5.35 மணியளவில் பொது ஒழுங்கு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் – முன்பதிவு செய்யலாம்!