சிங்கப்பூரில் ரோபோக்கள் வந்துவிட்டால் தொழிலாளர்களின் நிலை? – எந்திரவியல் ஆய்வு நிலையம் குறித்துப் பேசிய மனிதவள அமைச்சர் டான்

SINGAPORE: A dog-like robot has been set up and monitored to enable safe distance operations to exclude those in the Bishan-Ang Mo Kio Park.
SINGAPORE: A dog-like robot has been set up and monitored to enable safe distance operations to exclude those in the Bishan-Ang Mo Kio Park.(Photo: CNA)
சிங்கப்பூரில் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் மனிதவளப் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தானியக்கமும் இயந்திர மனிதக் கருவிகளும் அவசியமாகின்றன.
இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் இயந்திர மனிதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகஸ்ட் 15,2022 அன்று தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் துறையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளை ஆய்வாளர்கள்,தொழிலாளர்கள்,நிறுவனங்கள் ஆகிய முத்தரப்பினரும் கைப்பற்றலாம் என்று அவர் வழிமுறையை தெரிவித்தார்.

சுமார் 45 மில்லியன் நிதி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இதற்கான புதிய ஆய்வு நிலையம் ஆகஸ்ட் 15,2022 -ல் திறக்கப்பட்டது.
நவீன ரோபோட் தொழில்நுட்ப நிலையம் என்று அழைக்கப்படும் நிலையத்தில் உற்பத்திதுறை மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் தேவைப்படும் ரோபோக்களை உருவாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூர் அரசாங்கம்,அதன் ஆய்வு,மேம்பாட்டுத் துறையில் இயந்திரவியல் தொடர்பான ஆய்வுகளுக்கு தேசிய முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் டான் குறிப்பிட்டார்.