கடலைப் பாதுகாக்க சிங்கப்பூர் மேகொள்ளவிருக்கும் புது முயற்சிகள் – ஐ.நாவில் விவியன் உரை !

Vivian Balakrishnan

சிறிய கடல்சார் நாடான சிங்கப்பூரில் நம் வாழ்வும், வளமும் கடலைப் பொறுத்தே அமையும் என்று ஜூன் 28 அன்று போர்ச்சுகலின் லிஸ்பனில் நடந்த ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டில் (UNOC) வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது உண்மையில் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் என்றும் விவியன் கூறியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தில் கடலின் முக்கியத்துவம் பற்றியும் காலநிலை  மாற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

 

மேலும்  இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கடலின் நடவடிக்கையை அளவிடுதல் என்றும், அது தேவையான ஒன்று என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது  என்றும் கூறினார். கடலைப் பாதுகாப்பதற்கும், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக செய்ய வேண்டும் என்று ஐநா உறுப்பு நாடுகளை வலியுறுத்தினார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

 

இந்த நடவடிக்கைகளை அறிவியலின் அடிப்படையில் சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் இதற்கு அடித்தளமாக பலதரப்பு ஒத்துழைப்புடன் அணுகப்பட வேண்டும் என்றும் விவியன் கூறினார். சிங்கப்பூர் தனது பங்கை ஆற்ற, UNOCக்கு முன்பு சமர்ப்பித்த தன்னார்வ உறுதிகளில் 10 உறுதிகளைப் புதுப்பித்து, மேலும்  ஒன்பது புதிய உறுதிகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார். மேலும் பவளப்பாறைகளை வளர்க்க சூரிய சக்தியைப் பயன்படுத்துதல் பற்றிய ஆய்வு உட்பட 9 புதிய கடல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.