சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்
(Photo: MOM/FB)

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் சிலருக்கு நற்செய்தியாக புதிய Work Pass அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உலகளவில் உள்ள சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாக கொண்ட
சிங்கப்பூரின் ஒரு புதிய முயற்சி இதுவாகும்.

புதிய Work Pass அனுமதி விண்ணப்பங்ககள் அடுத்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Overseas Networks & Expertise Pass எனப்படும் அந்த புதிய அனுமதி வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய முடியும்.

புதிய Work Pass வைத்திருப்பவர், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் சிங்கப்பூரில் பல நிறுவனங்களைத் தொடங்கவும் முடியும்.

அதுமல்லாமல், நிறுவனங்களை இயக்கவும் மற்றும் வேலை செய்யவும் முடியும் என்பது அதன் கூடுதல் சிறப்பு.

பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்… கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது

ஆனால்…

அதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் S$30,000 நிலையான மாத சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும்.

அவர் குறைந்தபட்சம் US$500 மில்லியன் (S$698 மில்லியன்) சந்தை மூலதனம் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

இல்லை எனில், குறைந்தபட்சம் US$200 மில்லியன் (S$279 மில்லியன்) வருடாந்திர வருவாய் ஈட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்