உலகின் விலையுயர்ந்த நகரம் “சிங்கப்பூர்” – ஊழியர்களால் சமாளிக்க முடிகிறதா?

faster-wifi-speed in singapore

உலகின் விலைவாசி மிக அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது, அதனுடன் சேர்த்து நியூயார் நகரமும் முதலிடம் பிடித்தது.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி; 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக விலையுயர்ந்த பெருநகரம் குறித்த ஆய்வின் முடிவில் இது வெளியானது.

கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம் – சமீபத்தில் மட்டும் 2 ஊழியர்கள் பலி

கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அதே நேரத்தில் சிட்னி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தது மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் ஆகியவை தரவரிசையில் 88 இடங்கள் வரை உயர்ந்தன.

சிங்கப்பூர் கடந்த 10 ஆண்டுகால ஆய்வு அறிக்கையில் 8 முறை முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண சம்பளம் பெரும் ஊழியர்களால் விலைவாசியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜூரோங் தீவில் வெளிநாட்டு ஊழியர் கடலில் விழுந்து பலி