சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு சிறப்புத் தொகை – சுகாதார அமைச்சகம் அறிவித்தது உண்மையா?

Photo: Health Minister Official Facebook Page

சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் பணியாற்றும் 25,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு 1.7 முதல் 2.1 மாதம் வரையிலான அடிப்படைச் சம்பளம், ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

சிங்ஹெல்த் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.மேலும்,இந்த நிதியுதவி சமூக பராமரிப்பு அமைப்புகளில் பணியாற்றும் 2,600 செவிலியர்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 பெருந்தொற்று தீவிரமாகப் பரவிய போது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியது.

மருத்துவமனையில் நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் திறன் நாட்டின் சுகாதார ஊழியர்களுக்கு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் இ காங் தெரிவித்துள்ளார்.