உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: சிங்கப்பூரில் கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்!

Pic: The Star

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்தப் போர் என்பது இரு நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளின் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் வணிகத்தில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.

காவல்துறை அதிரடி; சந்தேக நபர்கள் 244 பேர் மீது விசாரணை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியால் சிங்கப்பூரிலும் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. ஐந்தில் நான்கு எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் எண்ணெய் விலையை லிட்டருக்கு 6 முதல் 21 காசுகள் உயர்த்தி உள்ளன. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சத்தைத் தற்போதைய நிலை தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்றிரவு (பிப்.25) நிலவரப்படி, SPC நிறுவனம் அதன் எண்ணெய் விலையை உயர்த்தவில்லை. இருப்பினும், மற்ற நிறுவனங்களைப் போல் அதுவும் விரைவில் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையையான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்தால், எண்ணெய் விலைகள் இன்னும் அதிகரிக்கும் என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். மோட்டார் கட்டணத்தைத் தவிர பயன்பாடுகள், சுற்றுப்பயணம், தளவாடம் தொடர்பான செலவுகளும் பாதிப்படையலாம் என கூறப்பட்டுள்ளது.

கடல்வழி ‘VTL’ பயணத் திட்டம் மூலம் பாத்தாம் தீவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகள்!