இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 11 சதவீத நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

Changi Airport Facebook

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த சுமார் 2,600 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மொத்த ஒமிக்ரான் எண்ணிக்கை 4,322 பேரில் அது கிட்டத்தட்ட 60 சதவீதம் ஆகும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்தார்.

தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து வந்தவரை வளைத்து பிடித்த போலீசார்

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த பாதிப்புகளின், அமெரிக்கா மற்றும் UK இருந்து தலா 16 சதவிகிதம் மற்றும் இந்தியாவில் இருந்து 11 சதவிகிதத்தினரும் அடங்குவர்.

மேலும், அதில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் குடிமக்கள், PR மற்றும் சிங்கப்பூர் திரும்பும் நீண்ட கால பயண அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் என்றும் திரு. ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

குறுகிய கால வருகையாளர்களை பொறுத்தவரை, அவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெற்றிபெற்ற இருவர்: தலா S$5.36 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்றனர்!