“சிங்கப்பூரில் வரும் நாட்கள், வாரங்களில் Omicron புதிய அலை எதிர்பார்ப்பு” – லாரன்ஸ் வோங்

singaporeans-happiness survey
Photo: gov.sg

Omicron பாதிப்புகளின் புதிய அலை இன்னும் சில நாட்களில் சிங்கப்பூரைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் அச்சம்: சிங்கப்பூருக்கு விமானம் செல்வதில் சிக்கல்

“வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் Omicron Covid-19 பாதிப்புகளின் புதிய அலையை சிங்கப்பூர் எதிர்பார்க்க வேண்டும்” என்று இன்று டிசம்பர் 27 பேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.

நேற்றைய டிசம்பர் 26 சுகாதார அமைச்சகத்தின் (MOH) அறிவிப்பை எதிரொலியாக வோங் மீண்டும் கூறியுள்ளார்.

“Omicron ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவுவதைப் போல, நமது சமூகத்திலும் பரவுவது தவிர்க்க முடியாத ஒன்று.”

“வரும் நாட்கள் மற்றும் வாரங்களில், கூடுதல் சமூக பாதிப்புகள் மற்றும் விரைவாக இரட்டிப்பாகும் பாதிப்புகளை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று MOH கூறியது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை