சிங்கப்பூர் பிரதமர் கழிவு நீரை குடித்தது நினைவு இருக்கா? இந்தியாவில் நடந்த மூக்குடைப்பு சம்பவம்!

பஞ்சாப் மாநில முதல்வர்  புனித நதியான காலி பெயின் நதியிலிருந்து நீரை குடித்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்று வலிக்கு காரணம் நதி நீரை குடித்தது தான் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வைன் இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் இட்ட பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் டிவிட்டரில் பதிவிட்டதாவது, “கடந்த 2002ல் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் பொதுவெளியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடித்து மக்களுக்கு நம்பிக்கையளித்தார்.

அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் அவர் விவரித்தார். சிங்கப்பூர் அப்போது மலேசியாவுடன் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் சண்டையிட்டுக்கொண்டிருந்தது. நான் சிங்கப்பூருக்கு ஆலோசனை சொன்னேன்.

சிங்கப்பூர் அறிவியல் பாதையில் சென்றது. ஆனால் பஞ்சாப் முதலமைச்சர் நம்பிக்கையின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே பஞ்சாப் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அசோக் ஸ்வைனின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.