சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!
Photo: Singapore Open Badminton 2023

 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி 2023 (Singapore Open Badminton 2023) , ஜூன் 6- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இந்த தொடரில், ஜப்பான், சீனா, இந்தியா, மலேசியா, தைவான், இந்தோனேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை செய்து சிக்கிய ஊழியர் – கைது செய்த போலீஸ்

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 13ஆவது இடத்தில் உள்ளவருமான பி.வி.சிந்து, பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை அகானே யமாகுச்சியை (Yamaguchi) எதிர்கொண்டார்.

இதில், பி.வி.சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஓபனில் இருந்து வெளியேறினார்.

அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 21-19 என்ற நேர் செட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வாங்சரோனை (Wangcharoen) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்

வரும் ஜூன் 11- ஆம் தேதி வரை நடைபெறும் சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 49 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.