சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள்…. அமெரிக்கா டாலர்கள் பறிமுதல்!

சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள்.... அமெரிக்கா டாலர்கள் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், போதைப்பொருட்கள், அரியவகை உயிரினங்களைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சூடான உணவுகளை வழங்கிய ‘Krsna’s Free Meals’!

வெளிநாடுகளுக்கு வரும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் TR567 என்ற விமானத்தில் செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர்.

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

அப்போது, 45 வயதான கண்ணன் என்ற பயணியிடம் இருந்து சுமார் 10,000 அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூபாய் 8,19,000 என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கண்ணனை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.