சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த இருவர்… பாஸ்போர்ட் தர மறுப்பு – ஏன் இந்த வேலை?

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த தம்பதி செய்த வேலையால் இப்போ அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

கோவைக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி கொண்டுவருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த கொடூரம்: துப்பாக்கி சுட்டு பலியான போலீஸ் அதிகாரி

இந்நிலையில், விமான பயணிகளை சோதித்த வருவாய் புலனாய்வு பிரிவு, மலேசிய நாட்டவர் தங்கேஸ்வரன், இவரின் மனைவி நந்தினியிடம் இருந்து 4.58 கோடி இந்திய மதிப்பில் சுமார் 4.2 கிலோ எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர். பின்னர் தங்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோவை நீதிமன்றத்தில் அவர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆனால், வருவாய் புலனாய்வு எதிர்ப்பு காரணமாக இதனை கோவை நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால் சொந்த நாட்டுக்கு சென்று விடுவார்கள் என கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், 6 மாதத்துக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் குறைந்த விலையில் 40 ஆண்டு காலம் உணவு வழங்கிய கடை மூடல்.. ஓய்வு எடுக்க முடிவு செய்தார் 78 வயதான உரிமையாளர்