சிங்கப்பூர் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இனி ஐந்து மணிநேரம் காத்திருப்பு கட்டாயம் !

Singapore passengers-trichy-airport

‘ஓமைக்­ரான்’ எனும் புதிய வகை கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளன.

இந்திய அரசும் தொற்று பாதிப்பு அபா­ய­முள்ள நாடு­க­ளின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறித்து நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம், அதில் சிங்கப்பூரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் உட்பட அந்த பட்டியலில் உள்ள நாடு­களில் இருந்து இந்­தி­யா வரும் பயணிகள் அனைவருக்­கும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், பயணிகளுக்கு விமான நிலை­யங்­க­ளி­லேயே கட்­டாய PCR பரி­சோ­தனை நடத்தப்படும் என அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், பரி­சோ­தனை முடி­வு­களை அறிய சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காத்­தி­ருக்க வேண்டும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்­ம­ராஜ் கூறியுள்ளார்.

அந்த பட்டியலில் உள்ள நாடுகளில் சிங்கப்பூருக்கு மட்டுமே தமிழக பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் அவர்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காத்­தி­ருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பயணிகள் சோதனை முடிவுகளை பெறும்வரை காத்திருக்க இடம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை பயணிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நிலவழி VTLகீழ் பயணம் செய்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று