சமூக ஊடங்களில் எதைவேனாலும் இனி எழுத முடியாது – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

சிங்கப்பூரில் ஆபத்தை விளைவிக்கும் உள்ளடக்கத்தை (Content) கொண்ட சமூக ஊடக தளங்கள் சில மணிநேரங்களில் அதனை முடக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 9) ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றுவது குறித்த விவாதம் நடைபெற்றது.

சுமார் 11,000க்கும் மேலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Facebook – Meta

ஆபத்தை விளைவிக்கும் உள்ளடக்கத்தை நீக்க மறுத்தால், ஆன்லைன் தளத்தை இயக்கம் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள வலைதள பயனீட்டாளர்களின் அந்த தளங்களை பயன்படுத்த தடையும் பிறப்பிக்க முடியும்.

கூடுதலாக ஆபத்தை விளைவிக்கும் உள்ளடக்கத்தை தடுக்க தவறும் வலைதள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற முடிவும் வெளியாகியுள்ளது.