பாஸ்போர்ட்டுகள் புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் ஆகியவற்றிற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்- சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் அறிவிப்பு

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. எனவே,சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பிக்கவும் அதிக அளவிலான மக்கள் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவோ விண்ணப்பிக்கவோ சிங்கப்பூரர்கள் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று (ICA) குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் புதன்கிழமை (May 11) பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் செயல்பாடுகளின் தாமதத்திற்கான காரணத்தை மேற்கோள் இட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான விண்ணபங்கள் தாமதத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICA மார்ச் மாதம் “பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கை முன்னோடி இல்லாதது ” என்று கூறியிருந்தது. Covid-19 கட்டுப்பாடுகளுடன் சுமார் 1 மில்லியன் காலாவதியான பாஸ்போர்ட்டுகளின் புதுப்பித்தல் கோரிக்கையின் காரணம் என்று குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. தற்போது சிங்கப்பூரர்களுக்கு பாஸ்போர்ட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

பொதுமக்களின் தேவையை மோசடி செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களில் பொதுமக்கள் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்