விசா இல்லாமல் உலகின் 192 இடங்களுக்கு பயணிக்கலாம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!

விசா இல்லாமல் உலகின் 192 இடங்களுக்கு பயணிக்கலாம் - உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!
Mothership and Unsplash

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) ஆய்வு செய்து வெளியிட்ட சமீபத்திய இந்த தரவரிசை ரிப்போர்ட் நேற்று ஜனவரி 10, 2023 அன்று வெளியிடப்பட்டது.

ஜப்பானின் நடந்த கோர விபத்தில் சிங்கப்பூர் பெண், அவரின் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – கணவர், மூத்த மகளுக்கு காயம்

அதாவது, விசா இல்லாமல் எத்தனை இடங்களுக்கு பயணிக்க முடியும் என்ற அடிப்படையில் உலகின் பாஸ்போர்ட்டுகளை அது வரிசைப்படுத்துகிறது.

ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூரின் பாஸ்போர்ட் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் உலகின் 192 இடங்களுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!