சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை (PR) பற்றிய விழிப்புணர்வு பதிவு..!

சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவதற்காக பலர் அதிக தொகையை செலுத்தி விட்டு, அதற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக நம்முடைய தளத்தில் பல வாசகர்கள் தகவல் கூறியுள்ளனர். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உங்களுக்காக சில அறிவுரைகளை தமிழ் மைக்செட் தளம் வழங்குகிறது.

நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூரில் உள்ள சில ஏஜெண்டுகள் மற்றும் ஆலோசனை மையங்களிடம் சென்று தங்களுடைய பணத்தை அதிக அளவில் செலுத்தி பலர் ஏமாறுகின்றனர். அதாவது வானுயர்ந்த கட்டிடங்களில் செயல்படும் சில ஆலோசனை ஏஜெண்டுகள், நிரந்தர குடியுரிமைக்காக பொதுமக்களிடம் 8000 டாலர் முதல் 10000 டாலர் வரை வசூல் செய்கின்றனர். மேலும், இதற்காக 6 மாத காலம் செயல்முறை என்று அலைய விடுகின்றனர்.

ஆனால், இதன் உண்மை நிலை என்னவென்றால், சிங்கப்பூர் அரசு இந்த PR-ஐ குறிப்பிட்ட சில விகிதங்கள் அடிப்படையில் மட்டுமே வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள், மலாய் மற்றும் சீனர்களுக்கு குறிப்பிட்ட கணக்கீட்டின் படி வழங்கி வருகிறது. எனவே இதற்காக நீங்கள் அதிக கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கின்றது.

இன்றைய சூழலில் சிங்கப்பூரில் PR-காக 100 டாலர் முதல் 10000 டாலர் வரை ஏஜெண்டுகள் வசூல் செய்கின்றனனர், ஆனால் நீங்கள் நிரந்தர குடியுரிமைக்கு தகுதி உடையவராக இருந்தால் அதிக தொகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நேரடியாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தை (ICA) அணுகுவது தான் உங்களின் பணம் மற்றும் நேரத்திக்கான சேமிப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.