” நாங்கள் என்ன பாவம் செய்தோம் ” செல்லப்பிராணிகளின் ஏக்கம் – நாய்கள் போன்ற செல்ல பிராணிகளை கைவிடும் சிங்கப்பூரர்கள்

singapore pets

Covid-19 வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தையே தடுமாறிப் போகத்தான் செய்தது. முழு ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு மக்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிங்கப்பூரில் உள்ள விலங்குகள் தங்குமிடங்களில் விலங்குகளை கைவிடுவது 30% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Covid-19 வைரஸ் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் விலங்குகளை முறையாக பராமரித்து வளர்ப்பதற்கான வசதி குறைந்தது. எனவே, சிங்கப்பூரர்கள் பெரும்பாலானோர் பொருளாதாரச் சிக்கல் காரணமாக செல்லப்பிராணிகளை விலங்குகள் தங்குமிடங்களில் விட்டு விட்டுச் செல்கின்றனர்.

இவர் செல்லப்பிராணிகளை கைவிடுவது கடந்த 6 மாதங்களாக அதிகரித்து வருகிறது என்று சில விலங்குகள் நல குழுக்கள் தெரிவித்துள்ளன.விலங்குகள் தங்குமிடங்களில் கிட்டத்தட்ட 120 முதல் 150 வரையிலான செல்லப்பிராணிகள் கைவிடப்பட்டுள்ளன.

Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ,சில சிங்கப்பூரர்கள் அலுவலகத்திற்கு செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற காரணங்களால் செல்லப்பிராணிகளை விலங்குகள் பராமரிப்பு மையங்களில் கைவிடுகின்றனர். குறிப்பாக நாய்கள் அதிக அளவில் கைவிடப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விலங்குகள் தங்குமிடங்களில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு நாய்கள் வரை கைவிடப்படுவது தெரிய வந்துள்ளது.சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை மறு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார்கள். மக்களின் இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் செல்லப் பிராணிகளும் அன்புக்காக ஏங்கித்தான் போகின்றன