S$70 மில்லியன் டாலர் வரை மோசடி – சிங்கப்பூரில் மின்னஞ்சல் மோசடி செயல் அதிகரிப்பு

fake email scam

சிங்கப்பூர் போலி மின்னஞ்சல்கள் மூலம் மோசடி செய்து வருகின்றனர். தொழில் பங்காளிகள் அல்லது பணியாளர்களை போல் போலியான மின்னஞ்சல் முகவரிகள் மூலம் மோசடி செயலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று மோசடி செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட S$70.8 மில்லியன் டாலரை இழந்துள்ளதாக சனிக்கிழமை (May 21) நடைபெற்ற செய்தி மாநாட்டில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ,குறைந்தபட்சம் 149 பேர் இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடி செய்பவர்கள் போலியான மின்னஞ்சல் கணக்குகளை வணிக பங்காளிகள் மற்றும் உடன் பணிபுரியும் சக ஊழியர்களாக காட்டிக் கொண்டனர்.

மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பெரும்பாலும் சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது எழுத்துக்களின் வரிசையை மாற்றியமைப்பதை உள்ளடக்கியதாகும். இந்த மின்னஞ்சல் முகவரிகளை முதல் முறை பார்க்கும்போது தெளிவாக இருக்காது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மின்னஞ்சல் பாதிக்கப்பட்டவர்களின் நிறுவனங்களின் வங்கி கணக்கு எண்ணில் மாற்றம் இருப்பதாகத் தெரிவித்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றுமாறு கேட்கும் என்று காவல்துறையினர் கூறினர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உண்மையான மின்னஞ்சல் வந்ததாக நம்பி வேறு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் வங்கியை அணுகினால் மட்டுமே வங்கி தரப்பில் இருந்து எந்த கோரிக்கை மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை என்பதை தெரிந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கொள்வார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.