ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்!

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்!
Photo: MFA

 

 

43வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (செப்.09) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்தோனேசியாவுக்கு செல்கிறார்.

40 மீட்டர் உயர டவர் கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியருக்கு திடீர் உடல்நலக்குறைவு..

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரத்தில் 43வது ஆசியான் உச்சி மாநாடு நாளை (செப்.05) தொடங்குகிறது. செப்டம்பர் 07- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரத்துக்கு நாளை (செப்.05) செல்கிறார்.

சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளனர்.

மியான்மர் விவகாரம், சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து ஆசியான் உச்சி மாநாட்டில் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஊழியர்கள் அச்சம்

26வது ஆசியான் ப்ளஸ் த்ரீ மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களை ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். குறிப்பாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியே நேரில் சந்தித்து இருதரப்பு உறவுக் குறித்துப் பேசவிருக்கிறார்.

கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர் – CCTV காட்சிகளில் பகீர்

சிங்கப்பூர் பிரதமர், இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில், சிங்கப்பூரின் துணை பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் தற்காலிக பிரதமராகப் பதவி வகிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.