ஆசிய- ஐரோப்பியக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

13- வது ஆசிய- ஐரோப்பிய கூட்டம் (13th Asia-Europe Meeting – ‘ASEM’) காணொளி வாயிலாக நவம்பர் 25- ஆம் தேதி அன்று தொடங்கியது. நவம்பர் 26- ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இஸ்தானாவில் இருந்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் காணொளி மூலம் கலந்து கொண்டார். அவருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் பங்கேற்றார்.

தென்னாப்பிரிக்காவின் மோசமான கிருமி மாறுபாடு பாதிப்பு சிங்கப்பூரில் இல்லை – சுகாதார அமைச்சர்

இக்கூட்டத்தில், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, பிராந்தியங்களில் நிலவும் சூழல், பொருளாதாரம், சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் விவாதித்ததாக தகவல் கூறுகின்றன.

ஆசிய- ஐரோப்பியக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நேற்றும், இன்றும் 13- வது ஆசிய-ஐரோப்பா கூட்டத்தில் (ASEM) கலந்து கொண்டேன். கடந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு நாம் சந்தித்திருப்பது நல்லது.

‘மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

தொற்றுநோயின் தாக்கம் குறித்து நாங்கள் விவாதித்தபோது, ​​சிங்கப்பூர் போன்று தடுப்பூசிப் போடப்பட்ட பயணப் பாதைகள் வழியாக, விநியோகச் சங்கிலிகளை மீட்டெடுக்கவும், சர்வதேச பயணத்தை பாதுகாப்பாக மறுதொடக்கம் செய்யவும் ஒத்துழைக்குமாறு சக ‘ASEM’ தலைவர்களை நான் வலியுறுத்தினேன்.

கம்போடியாவின் தலைமையின் கீழ், நாங்கள் ‘ASEM13’ தலைவரின் அறிக்கையையும், கோவிட்-19க்குப் பிந்தைய சமூக, பொருளாதார மீட்பு குறித்த புனோம் பென் (Phnom Penh) அறிக்கையையும், ‘ASEM’ இணைப்பில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு கட்டுரையையும் ஏற்றுக்கொண்டோம்.

புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

இவை ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான நமது கூட்டு உறுதியைக் காட்டுகின்றன. ‘ASEM’- ன் 25- வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், எங்கள் இரு பிராந்தியங்களுக்கிடையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த கூட்டாண்மைகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.