முதியோர்களே!“இனி கவலை வேண்டாம்” – சிங்கப்பூரில் முதியோர்களுக்கான அவசர சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் லீ

Photo: Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் லீ முதியோர்களுக்கான அவசர தொலைபேசி சேவையை நேற்று தொடங்கி வைத்தார். முதியோருக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக தேசிய அளவில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் ஐந்து நாள்களுக்கு இந்த சேவையானது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுபிரதமர் லீ சியென் லூங் “ஏசஸ் கேர்” உதவி தொலைபேசி சேவையை டெக் கீ சமூக மன்றத்தில் அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதியோர்களுக்கான சேவையை தொடங்குவதற்கான முயற்சியை ஏசஸ் கேர் மற்றும் சமூக அறநிறுவனமான ஆக்டோபஸ் ஆகியவை எடுத்திருந்தன.

சிங்கப்பூரில் கொள்ளை நோய் போன்ற தொற்று நோய்கள் தீவிரமாக பரவிய காலத்தில் முதியோர்கள் மிகுந்த மன உளைச்சலால் அவதிப்பட்டனர்.எனவே,தற்போது அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் ஐந்து நாட்களிலும் அனுபவம் நிறைந்த தொண்டூழியர்களால் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொலைபேசி சேவை நிர்வகிக்கப்படும் .உதவி தேவைப்படும் முதியோர்கள் நேரடித் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவசர உதவிக்கு கோரிக்கை விடுக்கலாம்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முதியோருக்கு தேவையான ஆலோசனைகளையும் இந்த தொலைபேசி சேவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்