சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

Prime Minister Lee Hsien Loong during his speech at the virtual Global Vaccine Summit. (PHOTO: Ministry of Communications and Information)
Prime Minister Lee Hsien Loong during his speech at the virtual Global Vaccine Summit. (PHOTO: Ministry of Communications and Information)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சீன பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில், ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வரும் மார்ச் 27- ஆம் தேதி அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் (Guangdong Province) உள்ள குவாங்சூ (Guangzhou), ஹைனான் மாகாணத்தில் (Hainan Province) உள்ள போவோ (Bo’ao), பெய்ஜிங் ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் லீ சியன் லூங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குவாங்டாங் மாகாணக் குழுவின் செயலாளர் ஹூவாங் குன்மிங் (Communist Party of China- ‘CPC’, Guangdong Provincial Committee Huang Kunming) சந்திக்கிறார்.

இந்திய ஊழியரை காணவில்லை.. ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு அவர் மதிய உணவு விருந்தளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, குவாங்டாங்கில் (Guangdong) சீன வாழ் சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூர் பிரதமர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

பின்னர், ஹைனானில் நடைபெறவுள்ள ஆசியாவிற்கான போவா ஃபோரம் ஆண்டு மாநாட்டின் (Bo’ao Forum for Asia- ‘BFA’ Annual Conference) தொடக்கக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு, சிங்கப்பூர் பிரதமர் உரை நிகழ்த்தவிருக்கிறார். மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் விருந்திலும் அவர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

வெந்நீரை ஊற்றி கொடூரம்… கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

அதனைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங், தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் ஜாவோ லெஜி (Chairman of the National People’s Congress Zhao Leji), சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தலைவர் வாங் ஹூனிங் (Chairman of the Chinese People’s Political Consultative Conference Wang Huning) மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெய்ஜிங் நகராட்சிக் குழுவின் செயலாளர் யின் லி (Secretary of the CPC Beijing Municipal Committee Yin Li) ஆகியோரை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ குங் உள்ளிட்ட அமைச்சர்களும், அமைச்சகங்களின் உயரதிகாரிகளும் சீனாவுக்கு செல்கின்றனர்.

மார்ச் 29- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

பிரதமர் லீ சியன் லூங் இல்லாத நேரத்தில், மார்ச் 27, 28 ஆகிய மட்டும், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், செயல் பிரதமராக இருப்பார். அதேபோல், மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் (Teo Chee Hean, Senior Minister and Coordinating Minister for National Security), மார்ச் 29- ஆம் தேதி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை செயல் பிரதமராக இருப்பார் என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி மாலை சிங்கப்பூருக்கு திரும்புகிறார் பிரதமர் லீ சியன் லூங்.