வீடுபுகுந்து கைவரிசையைக் காட்டிய கள்ளர்கள்! – சீறிப்பிடித்த சிங்கப்பூர்க் காவல்துறை!

thief temple spf
சிங்கப்பூர் காவல்துறையினர் வீட்டில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் 22, 2022 அன்று மாலை 5:20 மணியளவில், தம்பூரில் அமைந்துள்ள கோவிலில் திருட்டு நடந்ததாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது.
அங்கு கியூ லீ டோங் என்ற கோயில் அமைந்துள்ளது.திருட்டுச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.கோயிலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களில் காட்சிகள் பதிவாகியிருந்தன.
கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் ஆங் மோ கியோ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் திருடியவர்களின் அடையாளங்களை நிறுவினர்.தேடுதல் வேட்டைக்கு பிறகு டிசம்பர் 28 அன்று லோரோங் 14 கெய்லாங்கில் அவர்களைக் கைது செய்தனர்.

இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நாடளாவிய அளவில் இதேபோன்ற திருட்டுச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.வீட்டில் பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக நேற்று இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
சுமார் S$11,900 ரொக்கம் மற்றும் திருட்டுகளில் பயன்படுத்தியதாக நம்பப்படும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.குடியிருப்பில் திருடப்பட்ட குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.