தமிழனை கவுரவித்த சிங்கப்பூர்! மானத்தை காப்பாற்றி விட்டார்.. மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!

singapore police award
SPF

கடந்த பிப்­ர­வரி 2ஆம் தேதி, உலு பாண்­டான் பூங்கா இணைப்புப் பகு­தி­யில் விநோத் ராஜேந்­தி­ர­ன் தனது தோழியுடன் உண­வ­ருந்­தச் சென்றார். அன்றைய நாள் அவருக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.

இரவு உணவை முடித்துவிட்டு, திரும்பி வரும் நேரத்தில், அவர்கள் வரும் வழியில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. உடனே இருவரும் விரைந்து செயல்பட்டனர்.

அப்போது பெண் ஒரு­வ­ரைப் பாலி­யல் கொடுமை செய்த ஆண், இவர்­க­ளைக் கண்­ட­தும் தப்­பி­ ஓடிவிட்டார்.

இருந்தும்  விடா­மல் துரத்­திச் சென்ற விநோத், குற்றவாளியை மடக்­கிப் பிடித்தார். அவருடன் வந்த தோழி பானு காவல்­து­றை­யி­ன­ரைத் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்­டார்.

சம்­பவ இடத்­துக்­குச் சென்ற காவல்­து­றை­யினர் பாலி­யல் கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்­த­னர்.

விநோத் மற்றும் அவரது தோழி வரா­மல் இருந்திருந்தால், நிலைமை விப­ரீ­த­மாகி இருக்­கும் என்று அழு­த­படி பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

பொது உணர்­வுக்­கான விரு­து­க­ளுக்­குத் தெரிந்­தெ­டுக்­கப்­பட்ட ஆறு பேரில் விநோத்­தும், அவரது தோழியும் தேர்வு செய்யப்பட்டனர்.

பொதுப் பாது­காப்­புக்­குப் பங்­க­ளித்­த­மைக்­காக சிங்­கப்­பூர்க் காவல்­துறை இந்த விருதை வழங்­கிக் கௌர­வித்­தது.

இது தவிர கடை­யில் திரு­டிய நபரை பிடித்­துக் கொடுத்த ஒரு­வ­ருக்­கும், குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தில் துணை­பு­ரிந்த மூன்று அமைப்­பு­க­ளுக்­கும் விருது நிகழ்ச்­சி­யில் காவல்­துறை விரு­து­களை வழங்­கி­யது.