இணையத்தில் பட்டய கிளப்பும் “சிங்கப்பூர் பொங்கல் திருநாள்” பாடல்..!

Singapore pongal festive song viral

தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு, சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடல்
வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய் டிவியின் புகழ் செந்தில்கணேஷ் & ராஜலட்சுமி தம்பதியினர் பாடி உள்ளனர்.

டுலெட் பட நாயகன் நடித்து இயக்கிய பாடல் தான் ‘நாளு நாளு தமிழர் திருநாளு’ பாடல். சிங்காவுட் ப்ரோடைக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் திரு.லோகன், திருமதி. சரஸ், திரு.சந்தோஷ் நம்பிராஜன் இணைந்து தயா‌ரித்திருக்கும் பாடல், குட்டே ஃபூட்டி பார்லர் முதன்மை ஆதரவாளர், காயத்ரி உணவகம் இணை ஆதரவாளர்.

உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அங்கீகாரமான ஆட்சி மொழியை முதன்முதலில் தந்துள்ளது சிங்கப்பூர். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை. சிங்கப்பூர் பொங்கல், தமிழர் திருநாள் பாடல் சிங்கப்பூரில் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது தமிழக்கு கிடைத்த அங்கீகாரம்தான்.

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றியாளர்கள் செந்தில்கணேஷ் & ராஜலட்சுமி அவர்களின் முதல் சர்வதேச பாடலாகும்.

இந்த பாடலின் சிறப்பம்சமே, தமிழர் மற்றும் பொங்கல் பற்றிய சிறப்பம்சத்தை எடுத்துரைத்ததுதான்‌. பல மான்டேஜ்களும் பல நேரடி காட்சிகளும் பாடலுக்கான எடுக்கபட்ட காட்சிகளும் இணைக்கபட்டு இந்த பாடலை தயாரித்து உள்ளனர்.

மேலும், இந்த பாடலுக்கான படப்பிடிப்புகள் சிங்கப்பூர், மலேசியா, மதுரை ஆகிய இடங்களில் நடந்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் நடன கலைஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த வருட பொங்கலில் இந்த தமிழர் திருநாள் பாடல் கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் என்று நம்பப்படுகிறது.