சிங்கப்பூரில் அனைத்து Singapore Pools கிளைகளும் மூடல் – ஏன் தெரியுமா?

Singapore Toto

Singapore Pools TOTO: சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து Singapore Pools கிளைகளும் தற்காலிகமாக மூடப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, நாளை மே 9 ஆம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்ற செய்தி வெளியகியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் செய்யும் வேலை… சொந்த நாட்டுக்கு ஊழியர்கள் செல்லும் நிலை – இனி மாறும் MOM நம்பிக்கை

இருப்பினும், இந்த மூடல் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகள், லைவ்வைர் (Livewire) ​​இடங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குச் சேவைகள் பாதிக்கப்படாமல் இயங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Singapore Pools லாட்டரி கடைகள் இந்த ஆண்டு தனது 55 ஆம் வருட தொடக்க விழாவைக் கொண்டாடுகிறது.

அதன் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுமார் 14 சமூக சேவை அமைப்புகளை சேர்ந்த சுமார் 300 பயனாளிகளுடன் அந்த நாளை கார்டன் பை தி பேயில் கழிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.