Singapore Pools கடையில் லாட்டரி டிக்கெட் வாங்க சென்றபோது வாக்குவாதம்… மரணத்தில் முடிந்த சண்டை

Google Maps

ஃபேர்பிரைஸ் கிளையில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடையில் லாட்டரி டிக்கெட் எடுக்க சென்ற இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் போய் முடிந்தது.

மரைன் பரேட் சென்ட்ரல் ஃபேர்பிரைஸில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் கடந்த மே 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 73 வயது முதியவர் 80 வயது முதியவரைத் திடீரென்று கீழே தள்ளினார்.

சைனாடவுனில் முதியவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலை வைத்து அடித்து நொறுக்கிய ஆடவர் கைது

அதன் விளைவாக 80 வயதான அவர் சட்டென்று கீழே விழுந்தார், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதனை தொடர்ந்து, அவரை தாக்கியதாகக் கூறப்படும் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

மரணத்தை ஏற்படுத்திய அந்த கொடூர செயலுக்காகவும், தானாக முன்வந்து காயப்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டுக்கும் கடந்த மே 9 அன்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக 8World தெரிவித்துள்ளது.

73 வயதான Ho Ah Wah ​​லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்காக சிங்கப்பூர் பூல்ஸ் கடைக்குச் சென்றபோது பாதிக்கப்பட்ட Cheong Hua Kwee ஐச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனை அடுத்து Ho அவரை தரையில் தள்ளியதாகவும், இதனால் அவரது தலையில் அடிப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது போலீசார் விசாரணைக்கு ஃபேர்பிரைஸ் உதவி வருவதாக 8World தெரிவித்துள்ளது.

இந்தியனான உனக்கு சீனப்பெண் கேட்குதா? வெளிநாட்டு பணியாளரை நோக்கி வந்த புது சிக்கல்!