குறைந்துவரும் மக்கள்தொகை! – புலம்பெயரும் மக்கள் மற்றும் இறப்பு விகிதத்தால் பாதிப்பு!

Singapore population Increases

சர்வதேச நாடுகளிலிருந்து மக்கள் சிங்கப்பூரை நோக்கி பயணிக்கின்றனர்.இருப்பினும்,2030ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 6.9 மில்லியனுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையைக் கணக்கிட இரண்டு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் சிங்கப்பூர்வாசிகள் மக்கள்தொகையில் அடங்குவர்.இவற்றில் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை சில காரணங்களால் குறையும் அபாயம் உள்ளது.

பிறப்பு விகிதம்,உயிரிழப்பு விகிதம்,புலம்பெயர்ந்து செல்வோர் விகிதம் மற்றும் திருமணம் முடித்து இடம்பெயர்வோர் விகிதம் போன்றவை மக்கள் தொகையை பாதிக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பொறுத்தே சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அமையும் என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பிரதமர் லீயின் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலங்களில் உள்ள மக்கள்தொகை வளர்ச்சியானது அதற்கு முந்திய 10 ஆண்டுகளைவிட மெதுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குமாரி இந்திராணி கூறினார்.