போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 50- வது ஆண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு!

Photo: SingPost

சிங்கப்பூரில் உள்ள குட்வுட் பார்க் ஹோட்டலில் (Goodwood Park Hotel) போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (Central Narcotics Bureau- ‘CNB’) 50- ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (07/12/2021) நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டதன் 50- வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் போஸ்ட்டின் (Singapore Post Limited- ‘SingPost’) மூன்று சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமர் வெளியிட்டார்.

கொரோனா விதிமீறல்- பிரபல உணவு நிலையத்தில் அமர்ந்து உணவருந்த 10 நாட்களுக்கு தடை!

ஒவ்வொரு அஞ்சல் தலையிலும் ‘Stop Drug Abuse, Say No to Drugs, Drugs Destroy Lives’ உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த அஞ்சல் தலைகள் நேற்று (07/12/2021) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. அஞ்சல் தலைகளின் விலைகள் 30 காசு, 90 காசு, S$ 1.40 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலைகளை அனைத்து போஸ்ட் ஆபீஸ், சிங்கப்பூர் போஸ்ட்டின் shop.singpost.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.