கோழி ஏற்றுமதி தடை தற்காலிகமானதா?-சிங்கப்பூர் உடனான உறவை மலேசியா மதிப்பதாக சுகாதார அமைச்சர் Khairy பேச்சு

singapore poultry

ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து மலேசியா கோழி ஏற்றுமதிக்கு தடையை அறிவித்தது.இதனால் சிங்கப்பூர் கோழி விற்பனையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.ஏனெனில் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்வதால் மலேசியா அறிவித்த தடையினால் சிங்கப்பூரில் கோழி விநியோகம் முழுமையாக பாதிப்படைந்தது.

மலேசியாவின் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin ,கோழி ஏற்றுமதி தடை தொடர்பான பிரச்சனையை விரைவில் தீர்க்கும் என்றும், சிங்கப்பூர் உடனான உறவுகளை மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூருடனான மலேசியாவின் இருதரப்பு உறவை மதிப்பதாக சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்து உயிருள்ள கோழிகளாக சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும்.பின்னர் கோழிகள் உள்ளுரில் அறுக்கப்பட்டு குளிர்விக்கப்படுகின்றன. விநியோகம் மற்றும் விலைவாசி சிக்கல்கள் சீராகும் வரை ஏற்றுமதி தடை தற்காலிகமாக இருக்குமென்று நம்புவதாக மலேசிய சுகாதார அமைச்சர் Khairy தெரிவித்தார்.

இந்த பிரச்சினைகளை விரைவாக தீர்த்து சிங்கப்பூர் உட்பட அனைத்து நாடுகளுக்கும் கோழி ஏற்றுமதியை விரைவாக தொடங்குவோம் என்று கூறினார். கோழி தீவனம், வளரத் தேவையான காலம், பண்ணை பராமரிப்பு மற்றும் காலநிலை மாற்ற பிரச்சினைகள் போன்றவை ஒன்றிணைந்து அதிக விலைகள் மற்றும் கோழி தட்டுப்பாடு போன்றவற்றை உருவாக்கி விட்டன என்று தெரிவித்தார்